வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் பேனரில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மூன்றாவது படம் "மிக மிக அவசரம்.' இந்தப் படத்தின் மூலம் டைரக்டராகவும் அறிமுகமாகிறார் சுரேஷ் காமாட்சி. இன்றைய நவநாகரிக உலகில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். சூழல் மாறினாலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் அவலநிலை மட்டும் மாறவேயில்லை. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

Advertisment

sripriyanka

அந்தவரிசையில் காவல்துறையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றும் ஒரு இளம்பெண், அந்த டிபார்ட்மென்டில் சந்திக்கும் நுட்பமான பிரச்சினைகளை விரிவாகவும் பட்ட வர்த்தனமாகவும் "மிகமிக அவசர'-த்தில் அலசியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், எந்தக் கட்டும் கொடுக்காமல் "யு' சர்ட்டிபிகேட் கொடுத்தது டன் ஹீரோயினாக வெளுத்துக் கட்டியுள்ள ஸ்ரீபிரியங்காவின் அற்புதமான நடிப்பிற்கு தங்களது தனிப்பட்ட பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

ஹரீஷ்குமார் ஹீரோவாகவும் காவல்துறை உயரதிகாரிகளாக சீமான், டைரக்டர்கள் இ. ராமதாஸ், சரவண சக்தி, வீ.கே. சுந்தர் ஆகியோர் நடித்திருக்கும் "மிக மிக அவசரம்'’ பார்ப்பது மிகமிக அவசியம்.